ஈரோட்டில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பங்கேற்ற கில்லாடி குட்டீஸ் என்னும் தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் , ஈரோட்டில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பங்கேற்ற கில்லாடி குட்டீஸ் என்னும் தலைப்பில் பாட்டு பேச்சு நடனம் மற்றும் பன் முகத் திறமைகள் கொண்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ நடராஜர் நாட்டியாலையும் நடனம் மற்றும் கலை இசை கூட நிர்வாகி இரா. கோமதி ஞானசேகரன் முன்னிலை வகித்தார். ஈரோடு லக்ஷிதாமிதா நாட்டியாலயம் நிர்வாகி ரம்யா ஜெயக்குமார் வரவேற்றார். ஈரோடு மாநகராட்சி 35 வது மாமன்ற உறுப்பினர் புவனேஸ்வரி பாலசுந்தரம் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். நூற்றுக்கு மேற்பட்ட போட்டியா ளர்கள் பங்கேற்ற பாரதம் , மேற்கத்திய நடனம், விணை சுரகம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இப்ப போட்டிகளுக்கு நடுவராக பரதநாட்டிய குழு சிலம்பு செவ்வி மற்றும் கோமதி ஞானசேகரன் ஆகியோர் செயல்பட்டனர். ஒசூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் வி. கண்ணகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பரிசளிப்பு விழாவில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி. செல்வராஜ் கலந் துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ஈரோடு சம்பத் நகர் ரவீந்திரன் , கரூர் வழக்கறிஞர் எம். விஜயகுமார் , இளங்கோ கன்னியாகுமரி சமூக ஆர்வலர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஈரோடு தாரணிகா நன்றியுரையாற்றினார்.
No comments