நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி திமுகவைச் சேர்ந்த ஏழு பெண்களிடம் 20 லட்சம் மோசடி. திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் பரமானந்தம், திருச்செங்கோடு நகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கண்ணாம்பாள் ஆகியோர் மீது பெண்கள் பரபரப்பு புகார்.சொந்தக் கட்சியினரையே ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பணம் கொடுத்து ஏமாந்த அதிர்ச்சியில் தனது கணவர் இறந்து விட்டதாக பெண் பேட்டி. மாவட்ட திமுக செயலாளர்,நகர திமுக செயலாளர் ,காவல்துறையினர் அனைவரிடமும் புகார் அளித்தும் இதுவரை ஆளுங்கட்சி என்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் தங்களுக்கு பணம் கிடைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டுமென பெண்கள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறினார்கள்.
ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments