திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து பாகன் உள்பட இருவர் பலி

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த கோவிலில் 27 வயது மதிக்கத்தக்க தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தினமும் குளிப்பாட்டி அலங்கரித்து பாகன் உதயகுமார் தெய்வானையை பராமரித்து வந்தார்.

 தினமும் தெய்வானை கோவில் வளாகத்தில் உலா வரும்.இன்று மாலை 3:30 மணி அளவில் தெய்வானை பாவனையும் அவரது உறவினர் சிசுபாலர் என்பவரையும் மிதித்தது. இதில் சிசு பாலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிறுக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகன் உதயகுமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீசார் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை.

Post a Comment

0 Comments