தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு பெரிய கொட்டகை இன்கீழ் வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானையை பாகன் உதயகுமார் பராமரித்து வருகிறார். தெய்வானை தனது 6 வயதில் திருச்செந்தூருக்கு கொண்டுவரப்பட்டது தற்போது 25 வயது ஆகிறது. இந்த நிலையில் தற்போது தெய்வானை யானை உணவளிக்க வந்த பாகன் உட்பட அவரது உறவினரையும் மிதித்து கொடூரமாக கொன்றுள்ளது.
இச்சம்பவம் திருச்செந்தூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அடுத்து யானையை முழு பரிசோதனை செய்வதற்காக மருத்துவ குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ரேவதி ரமணன் கூறியதாவது, பொதுவாக ஆண் யானைக்கு தான் மதம் பிடிக்கும் பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. இருந்தும் தெய்வானை மிகவும் சாதுவான ஒரு யானையாகும். ஆனால் தெய்வானை இரண்டு பேரை தாக்கியது மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
ஒருவேளை யானையை சரியான நேரத்தில் குளிக்க வைக்காமல் விட்டிருக்கலாம், தகுந்த உணவுகளை அளிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது யானைக்கு இடையூறு ஏற்படும் விதமாக சத்தங்களோ, அதிகமான ஒலியோ ஏற்பட்டு இருக்கலாம். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் யானை இவ்வாறு நடந்திருக்கும். இதுகுறித்து அப்பவுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே என்ன என்பதை கூற முடியும். தெய்வானையை முழு பரிசோதனை செய்ய நெல்லையிலிருந்து வன மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments