'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என்று கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் சபரிமலை ஐயப்பனைப் பற்றி கானா பாட்டை பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் மற்றும் ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சாதிய அடிப்படையிலும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதமும் பேசி வருபவர் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித். இவரது நீலம் பண்பாட்டு மையத்தில் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழு உள்ளது. இதில் கானா பாடகர்களும் பாடல்களை பாடி வருகின்றனர்.இந்த நிலையில் முன்பு பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற கானா பாடகியான இசைவாணி என்பவர் 2019ல் நடந்த இசை நிகழ்ச்சியில், 'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' எனத் துவங்கும் பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை இப்போது சிலர் டிரென்ட் செய்ததால், சர்ச்சையாகி வருகிறது.
அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. இதை விமர்சித்து தான் அவர் பாடலை பாடி உள்ளார்.இப்படி செய்வதன் மூலம் ஹிந்துக்களின் நம்பிக்கையையும் அவர் இழிவுபடுத்தி உள்ளார், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்கிறார்.ஒரு கிறுஸ்துவ பெண்ணான இசைவாணி, சிலுவை அணிந்தபடி ஒரு ஹிந்து கடவுள் பற்றி பாடியது சரியா. தனது மதத்தை விமர்சித்து அப்படி பாடுவாரா. ஹிந்து மதம் பற்றி மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசலாம், பாடலாம் என்று நினைத்து, மாற்று மதத்தினரை புண்படுத்துகிறார்.
இதுதொடர்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரில், இசைவாணி கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். இயேசுவை புகழ்ந்து அவர் பாடல் பாடியுள்ளதோடு, மேடையில் ஐயப்பனை இழிவுப்படுத்தி பாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல் பா ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.தெலுங்கர்கள் பற்றி நடிகை கஸ்துாரி ஏதோ கூறி விட்டார் என்று விரட்டி விரட்டி கைது செய்த தமிழக போலீஸ், இசைவாணி விவகாரத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்? ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா.
இது பற்றி சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
0 Comments