என் காதலி உயிருக்கு ஆபத்து..... கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த காதலன்

 



திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். இப்போது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறேன். திருப்பத்தூர் அடுத்துள்ள அச்சமங்கலத்தில் வசிக்கும் 20 வயதான பெண்ணும், நானும் காதலிக்கின்றோம். நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு சமூகம். அதனால் எங்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 

நாங்கள் இருவரும் மேஜர். அதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள காத்திருக்கிறோம்.ஆனால் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளாத பெண் வீட்டார் தொடர்ந்து இடையூர் ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நான் விரும்பிய பெண்ணை, அவர்களது வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, பேசவிடாமல் தடுத்து வருகின்றனர். இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன்பு நான் விரும்பிய பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். 

அப்போது அவர்கள் என்னை சரமாரியாக தாக்கி, இனி அவரைப் பார்க்க முடியாது என்று கூறினர்.எனக்கு அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. நான் காதலிக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை காப்பாற்றி என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். இந்த மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள் காவல்துறையினருக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments