• Breaking News

    நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின்

     


    தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்ட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனு எழும்பூர் நீதிமன்றத்தில் 14-வது மேஜிஸ்ட்ரேட் தயாளன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.மனுவில் தான் சிங்கிள் மதர் என்றும் தனக்கு ஸ்பெஷல் சைல்ட் இருப்பதால்  ஜாமின் வழங்குமாறு கஸ்தூரி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    No comments