அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணிப்பு....?
விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி நடத்த இருக்கும் 'எல்லோருக்கும் மன தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில், இந்த நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துக்கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.தவெக தலைவர் விஜயுடன் ஓரே மேடையை பகிர்ந்துகொண்டால், திமுக கூட்டணியில் தேவையற்ற குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பும் என்பதால் திருமாவளவன் இந்த நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.
No comments