நம்பியூர் அரசு சமூக சுகாதார நிலையத்தில் புதிய ரத்த பரிசோதனை நிலையம் திறப்பு விழா
ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு சமூக சுகாதார நிலையத்தில் புதிய ரத்த பரிசோதனை மற்றும் அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துச்சாமி ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ரத்த பரிசோதனை நிலையத்தை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து நம்பியூர் அரசியல் சமூக சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்பியூர் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.நம்பியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா,நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் குத்து விளக்கு ஏற்றி பொது மக்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் , திமுக கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அவைத் தலைவர் பெரியசாமி,மாவட்ட கலை இலக்கியப் பேரவை துணை அமைப்பாளர் முருகசாமி, திமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் பழனிச்சாமி, நம்பியூர் ஒன்றிய பொருளாளர் மணி,சிவக்குமார் சாந்தாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி.
No comments