• Breaking News

    தொடர் விமர்சனம்..... தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு


     தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் தற்போது சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜயும் சற்று முன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தற்போது விஜய் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

     அதாவது யார் கட்சியை பற்றி விமர்சனம் செய்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக சீமான் விஜயை மிகவும் விமர்சித்த நிலையில் அதற்கு தமிழக வெற்றி கழகத்தினர் பதிலடி கொடுத்து வந்த நிலையில் தற்போது யாரும் யார் விமர்சித்தாலும் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் மற்றும் மக்களிடையே கட்சி பற்றி எடுத்து செல்வது போன்ற பணிகளை மட்டும் செய்யுமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    No comments