ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு திடீர் நெஞ்சுவலி.... சென்னை அப்பல்லோவில் அட்மிட்

 


இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ். இவருக்கு தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாஸ் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவர் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. இவர் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவி காலம் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. மேலும் இவருக்கு தற்போது 67 வயது ஆகும் நிலையில் மீண்டும் அவருடைய பதவி காலம் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments