சென்னை நந்தம்பாக்கத்தில் மனோகரன் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சுகன்யா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் மனோகரன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார்.
அதில் சுகன்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிந்து சுகாதார துறையினர் மனோகரன் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் சுகன்யா மற்றும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனோகரன்னிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments