தமிழகத்தில் தினந்தோறும் பல லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனை பல லட்ச தொழிலாளர்கள் நம்பி உள்ளனர். இந்நிலையில் டீசல் மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதோடு டிரைவர் மட்டும் கிளீனர் தட்டுப்பாட்டால், லாரிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை.
இதற்கிடையில் போக்குவரத்து காவல்துறையினர் விதிமுறைகளை மீறி ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். இதனால் லாரி தொழில் மேலும் பாதிப்படைகிறது என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்துமாநில லாரி உரிமையாளர் தன்ராஜ் கூறியதாவது, டீசல் மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கியுள்ளது. இதில் லட்சக்கணக்கான லாரி இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.
அனைத்து லாரிகளும் ஆண்டுதோறும் எப்சி காட்டி தான் சாலையில் ஓட்டுகிறோம், ஆனால் காவல்துறையினர் ஏதோ ஒரு காரணத்தை கூறி அபராதம் விதிக்கின்றனர். இது தவிர சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளுக்கு, வாரத்துக்கு ஒரு முறை காவல்துறையினர் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். இது சென்னையில் அதிக அளவில் நடக்கிறது. இதுகுறித்து காவல்துறை டிஜிபி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேல் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
0 Comments