மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பெண் ஐடி ஊழியர் பலி

 


மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷினி(8) என்ற மனைவி உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரோஷினி மின் மோட்டாரை இயக்கியுள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ரோஷினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரோஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments