அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் இந்திய ராணுவ வீரராக உள்ளார். இவர் தனது வீட்டை சுற்றி சுவர் கட்ட ஏற்பாடு செய்தார். அப்போது வரதராஜனின் தம்பி மகன்களான சரண்ராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் வரதராஜனை தாக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் போலீசாக இருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ரஞ்சித் குமார் நேற்று காலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்.
அவர் ராணுவ வீரர் உடையில் வந்திருந்தார். திடீரென தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்ல வென்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் வழுக்கட்டாயமாக தூக்கி சென்று அங்குள்ள அறையில் தங்க வைத்தனர். அதன் பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments