கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது

 


கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த 15 வார்டுகளை சேர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் இன்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி கேஎல்கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி கேஎல்கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாபொசி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் நடைபெற்ற இந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும், வாக்காளர் பட்டியல் நீக்கம், பெயர் திருத்தம்  உள்ளிட்ட பணிகள்  முகாமில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி கேஎல்கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வாக்காளர் பட்டியல் திருத்த  பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை திமுக சார்பில் பாக முகவர்களான டி.கே.ராஜா, சரண்ராஜ்,  மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி தீனதயாளன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் அதிமுக சார்பில் பேராட்சி கவுன்சிலர் தீபா முனுசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். 

சனிக்கிழமை துவங்கிய இந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். மேலும் வருகின்ற நவம்பர் 23 மற்றும் 24ம் தேதியும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments