கொடைக்கானலில் ஒரே வாரத்தில் இரு காட்டு யானைகள் பலி..... பூச்சிக்கொல்லி மருந்து காரணமா...?
கொடைக்கானலில் அஞ்சுவீடு, பாச்சலூர், பள்ளங்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன. கடந்த 12ம் தேதி வெங்கல வயல் எனும் பகுதியில் ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்தது.
இரு தினங்களுக்கு முன்பாக, 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு காட்டு யானையும் உயிரிழந்திருந்தது.அடுத்தடுத்து காட்டு யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது வனத்துறையினரையும், வன ஆர்வலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யானை உயிரிழந்து கிடந்த பகுதிக்கு அருகே பூச்சிக் கொல்லி மருந்துகளும் கிடந்ததால், ஒருவேளை அதனை சாப்பிட்டதால், யானை உயிரிழந்திருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், பூச்சி கொல்லியை பயன்படுத்தும் விவசாயிகள் தோட்டப்பகுதிகளில் அதனை அப்புறப்படுத்த உத்தரவிட்ட வனத்துறை அதிகாரிகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இதனிடையே, யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments