திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.சுமார் 120 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியின் தற்போது கட்டிட வேலை நடைபெற்று 90 சதவித வேலை முடிவடைந்த நிலையில், பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டிடம் அப்பகுதியைச் சேர்ந்த காரல் மார்க்ஸ் என்பவர் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் காரல் மார்க்ஸ் என்பவருக்கும் ஏற்பட்ட சொந்த பிரச்சனையை பொது பிரச்சினையாக மாற்றி அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவல் அறிந்து வந்த மேல் செங்கம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சொந்தப் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றி அரசு பேருந்தை சிறை பிடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல் செங்கம் காவல்துறையினரிடம் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கம் செய்தியாளர் S.சஞ்சீவ்.
0 Comments