• Breaking News

    ஆளுங்கட்சியை எதிர்த்தால் தான் ஹீரோவாக முடியும்..... நானும் அரசியலுக்கு வருவேன்...... நடிகர் பார்த்திபன்

     


    தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பேசிய நிலையில் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவர் பதில் அளித்தார். அவர் பேசியதாவது, இதை ஒரு தவிர்க்க முடியாத அரசியல் ஆக நான் பார்க்கிறேன். இதற்கு முன்பும் நடிகர்கள் அரசியலுக்கு வந்த போது இப்படிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் அதே விமர்சனங்கள் தற்போது விஜய் மீதும் வைக்கப்படுகிறது.

    நடிகர் விஜயின் எழுச்சியும் அவருடைய மேடைப்பேச்சும் பிரமாதமாக இருந்தது. அவர் அடுத்தடுத்து நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். ஆளும் திமுக கட்சியை விஜய் எதிர்ப்பது சரிதான். ஏனெனில் புதிதாக கட்சி தொடங்கும் போது ஆளும் கட்சியை தான் விமர்சித்து அரசியல் செய்ய முடியும். அப்படித்தான் விஜயும் அரசியல் செய்கிறார். விஜய்க்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளை மீறி அவர் ஆளுங்கட்சியை எதிர்த்தால் தான் ஹீரோவாக முடியும் என்றார். மேலும் எனக்கும் அரசியல் மிகவும் பிடிக்கும் என்று நானும் ஒரு நாள் கண்டிப்பாக அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றும் பார்த்திபன் கூறினார்.

    No comments