அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..... நடத்துனர் கைது


 நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பேருந்து நடத்துனர், அதில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட்டு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கூறினார். 

இதில் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், ஊர் மக்களுடன் ஞானியாபுரம் வந்த பேருந்தை நிறுத்தினார்.இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் இருந்து நடத்துனரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அந்த விசாரணையில் அவர் உண்ணாமலைக்கடையை சேர்ந்த சசி (54) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments