மாநில அளவில் பல்வகை பணிகளில் சிறந்தகூட்டுறவு சங்கமாக திருச்செங்கோடு TCMS தேர்வு.சேலத்தில் மாநில அளவிலான 71-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுலாதுறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில, மாவட்ட அளவிலான கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டதில், பல்வேறு வகைகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்கான மாநில அளவிலான சிறப்பு விருது திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கப்பட்டதை சங்கத்தின், இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் ஏ.விஜயசக்தி, பணியாளர் அலுவலர் ரா.ம.ராஜேந்திரன் மற்றும் பொது மேலாளர் (பொ) சி.நல்லமுத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி (சேலம்), தமலையரசன் (கள்ளக்குறிச்சி), சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ப.ரவிக்குமார், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜெ.ஜெயகுமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments