• Breaking News

    பிரபல நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு

     


    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சீதா. இவர் தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில் சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட சீதா அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் பின்னர் சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    அவரையும் பிரிந்து விட்டதாக தகவல் வெளிவந்தது. தற்போது நடிகை சீதா விருகம்பாக்கம் பகுதியில் உள்ள புஷ்பா காலனி பகுதியில் வசித்து வரும் நிலையில் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது அவருடைய வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லையாம். அவருடைய மற்ற நகைகள் அனைத்தும் இருக்கும் நிலையில் ஜிமிக்கியை மட்டும் காணாததால் வீட்டில் வேலை செய்பவர்கள் அல்லது உறவினர்கள் யாராவது தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின்  அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments