• Breaking News

    திருமலையில் கிறிஸ்தவ பாடல் பாடி ரீல்ஸ் எடுத்த பெண்..... போலீசார் விசாரணை

     


    ஆந்திராவில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி திருமலைக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.திருமலையில் இந்து மதம் அல்லாத வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் மதப்பிரச்சாரம் செய்யவும், வழிபாடு நடத்தவும் சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருமலை பாபநாசம் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களில் 20 பேர் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.அவர்களில் ஒருசில பெண்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான பாடல்களைப் பாடி ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments