கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை கொண்டு சென்ற போது அந்த பகுதியிலிருந்து சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
அப்போது சில தீப்பொறிகள் நாட்டு வெடிகள் மீது பட்டதால் திடீரென வெடித்து சிதறியது. இதில் வாலிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று இரு சக்கர வாகனத்தில் ஆந்திராவில் இருவர் பட்டாசுகளை கொண்டு சென்ற போது திடீரென வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments