காவலர்களை லத்தியால் தாக்கிய 6 பேர் கைது

 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அந்த கும்பல் அத்துமீறி நடந்து கொண்டதோடு இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி கம்புகளை பிடுங்கி அவர்களையே சரமாரியாக இதில் படுகாயமடைந்த இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு போலீஸ்காரர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேட உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த சரவண கார்த்திக், முத்துராஜ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments