நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கூட கட்சியிலிருந்து விலகும் நிலையில் அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்நிலையில் திமுக கட்சியின் நிர்வாகி ஜெயராமன் தற்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சீமான் விடிய விடிய சரக்கடித்துள்ளார்.
அவர் ஒரே நாளில் 64,000 க்கை சரக்கு அடித்து விட்டு பில் கட்டாமல் ஓடிவிட்டார்.பின்னர் அந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு அந்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் தகவல் கொடுத்து நிலையில் பின்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிறிது சிறிதாக அந்த பணத்தை ஹோட்டலுக்கு சென்று அடைத்துள்ளனர்.
அதன்படி 5000, 10,000 என கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துள்ளனர். ஒரே நாள் இரவில் இவ்வளவு பெரிய அசிங்கத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால் இவ்வளவு அசிங்கப்பட்டு இந்த கட்சியில் இருக்க வேண்டுமா என்று நினைத்ததன் கட்சியிலிருந்து விலகியதாக அவர் வீடியோ வடிவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments