• Breaking News

    சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது ஏறிய லாரி..... சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி....

     


    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கநல்லூர் பகுதி உள்ளது. இங்குள்ள நாட்டிகா என்ற பகுதியில் சிலர் சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அந்த வழியாக ஒரு லாரி சென்ற நிலையில் அது திடீரென  சாலை ஓரம்  தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த லாரி ஓட்டுனரை கைது செய்துள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று இருந்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததாக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் பாலக்காட்டில் சிறு வியாபாரம் செய்து வந்த வணிகர்கள். இவர்கள் 9 பேரும் அந்த பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து தங்கி இருந்த நிலையில் லாரி மோதி விபத்தில் 5 பேர் இறந்தனர். மேலும் இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    No comments