• Breaking News

    அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 வாலிபர்கள் கைது


     ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில், போதை ஊசி பயன்படுத்துவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்தியூர் பகுதியை சேர்ந்த தேவராஜ், அபினேஷ், ஹரிஹரன், இளம்பரிதி, சுரேஷ் ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேவராஜ் என்பவர் ஆன்லைன் மூலமாக ஊசி மற்றும் மாத்திரைகள் வாங்கி, தனக்கு தானே செலுத்தி விட்டு மற்ற 4 பேருக்கு செலுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

    No comments