தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரை ஒருதலையாக காதலித்து வந்த மதன் என்பவர் பள்ளி வகுப்பறையில் புகுந்து ரமணியை குத்தி கொலை செய்தார்.
அதாவது மதன் ரமணியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் பெற்றோரிடம் சென்று கேட்டபோது அவர்கள் விருப்பமில்லை என்று கூறிவிட்டனர்.ரமணியின் பெற்றோர் விருப்பமில்லை என்று கூறியதை கேள்விப்பட்ட மதன் ஆத்திரத்தில் பள்ளிக்கு சென்று ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் ஆசிரியை ரமணி உடலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மேலும் தற்போது முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது மிருகத்தனமானது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைவில் குற்றவாளிக்கு சட்டப்படி உரியதண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
0 Comments