ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் AITUC சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 4- வது மாநாடு மாவட்ட துணை தலைவர் இரா.ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது..இ.கம்யூ. சத்தி. நகர செயலாளர் எஸ். ஜமேஷ் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
சத்தி நகர் மன்ற தலைவர் R. ஜானகி ராமசாமி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி Ex.MLA.பி.எல். சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சங்கத்தின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர். பவானி பி.எல். சிவராமன், சங்க மாவட்ட துணை செயலாளர் E. சண்முக சுந்தரம் ஆகியோர் சங்க நோக்கம், செயல்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.இம்மாநாட்டில் சத்தி நகராட்சி விற்பனை குழு உறுப்பினர் தேர்தலில் ஏஐடியூசி சார்பில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு பாராட்டி, விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாதர் சங்கம் கா.மல்லிகா வாசு, மாணிக்க ராஜ், நந்தகுமார்,சுந்தர ராஜன், மாதேஷ், அன்னலட்சுமி, கிருஷ்ணசாமி,மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட 100 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments