டெல்லியில் இருந்து அமெரிக்கவிற்கு 40 நிமிடத்தில் பயணம்..... எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்
உலகிலேயே இரண்டாவது பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கி அதனை எக்ஸ் தளமாக பெயர் மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அதிவிரைவாக செல்லும் திட்டத்தின் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
எக்ஸ் லோகோ வடிவமைப்பாளர் டெஸ்லா மோட்டார்சின் இன்ஜினியர் அலெக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் கப்பல் ஒன்றில் பயணிகள் ஏறியதும் அது ஒரு ராக்கெட் தளத்திற்கு செல்கிறது ராக்கெட் தளத்தில் உள்ள ராக்கெட்டில் பயணிகள் ஏறியவுடன் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு ஒரு மணி நேரத்திற்குள் வெகு விரைவாக செல்ல முடிகிறது.
அதாவது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் காலை 6.30 மணி அளவில் கப்பலில் ஏறிய பயணிகள் ராக்கெட் ஏவுதலத்திற்கு சென்று ராக்கெட்டில் ஏறியவுடன் அந்த ராக்கெட் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஷாங்காய் நகரை அடுத்த 30 நிமிடத்தில் சென்றடைகிறது.இதேபோல் டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்வதற்கு 45 நிமிடமும், டோக்கியோவில் இருந்து டெல்லிக்கு 30 நிமிடமும், லண்டனில் இருந்து நியூயார்க் செல்வதற்கு 29 நிமிடமும் ஆகிறது என அந்த வீடியோவின் கீழ் பயண நேரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு குறைந்தது விமான மூலம் 15 மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்த புதிய ஏவுகணை மூலம் செல்வதால் 40 நிமிடத்திலேயே அமெரிக்காவில் உள்ள சன் பிரான்சி ஸ்கூலுக்கு டெல்லியில் இருந்து சென்றுவிடலாம்.இந்த வீடியோவுக்கு எலான் மஸ்க் “இது இப்போது சாத்தியமே” என தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இதற்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
No comments