• Breaking News

    3-வது முறையாக வெற்றி..... மும்பையை தெறிக்கவிட்ட கேப்டன் தமிழன்


    மகாராஷ்டிரா சட்டசபை 288 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 145 இடங்களிலும், சிவசேனா 81 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

     மற்றொருபுறம் மகா விகாஸ் ஆகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 102 தொகுதிகளிலும், சிவசேனா 92 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 86 தொகுதிகளிலும் போட்டியிட்டது.இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    இந்த நிலையில் மகாராஷ்டிராவின் சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இவர் 7500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மும்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழரான கேப்டன் தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

    No comments