ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஆனைகொம்பு அரங்க திருமண மண்டபத்தில் அனைத்து வணிகர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் எஸ் .என்.ஜவகர் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எஸ். ஆர். பி.வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார்.
சங்கத்தின் நிர்வாகிகள் சத்தி அனைத்து வணிகர் சங்க செயலாளர் சேவியர் மற்றும் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் ஆகியோர் சொத்து வரி உயர்வு, ஜி.எஸ்.டி.வரி உயர்வு குறித்து விளக்கி பேசினார்கள். தொடர்ந்து தமிழக அரசு சொத்து வரியை 6சதவீதமும், மத்திய அரசுஜி.எஸ்.டி.வரியை 18 சதவீதமும் உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சத்தியமங்கலத்தில் கடையடைப்பு போராட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் தொடர்ந்துபோராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மளிகை, ஜவுளி, நகை, ஓட்டல் உரிமையாளர்கள் திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments