திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, கட்சி என வந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதிமுக நிர்வாகிகள் பொறுமை இல்லாமல் கவனமின்றி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். இதே நிலை நீடித்தால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் எதிர்க்கட்சியாகவே இருக்க நேரிடும். கருத்து வேறுபாடு இருந்ததால் தான் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். இனி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments