ஐபிஎல் 2025 மெகா ஏலம்.... எந்த அணி எந்தெந்த வீரர்களை எடுத்தது..... முழு விவரம்


 சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று முதல் நாள் ஏலம் நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஏலம் தொடர்கிறது. நேற்று முதல் நாளில் 84 வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 72 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு அணியும் 120 கோடி வரை செலவு செய்து வீரர்களை ஏலத்தில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

இதில் 12 வீரர்களை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் ரவிச்சந்திரன், நூர் அகமது, ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, கலீல் அகமது, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் ஆகியோர் எடுக்கப்பட்டனர். அதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், சுயாஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, பில் சால்ட், ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் எடுக்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், அதர்வா டைடே, சிமர்ஜீத் சிங், ஆடம் ஜம்பா, அபிநவ் மனோகர், ராகுல் சாகர், ஹர்ஷல் படேல், முகமது சாமி மற்றும் இஷான் கிஷன் ஆகியோ எடுக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், மகீஷ் தீக்ஷனா, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில், விஷ்ணு வினோத், ஹர்பிரீத் சிங், யாஷ் தாகூர், விஜயகுமார் வைஷாக், மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஸ்டோயினிஸ், சாஹல், அர்ஷ்தீப் சிங், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய வீரர்கள் எடுக்கப்பட்டனர். மும்பை இந்தியன்ஸ் அணியில், கரன் ஷர்மா, ராபின் மின்ஸ், நமன் திர், டிரெண்ட் போல்ட் ஆகிய வீரர்களும், லக்னோ அணியில் ஆரியன் ஜூயல், மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், டேவிட் மில்லர், ஆவேஸ் கான், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

கொல்கத்தா அணியில் மயங்க் மார்க்கண்டே, வைபவ் அரோரா, குர்பாஸ், ரஹ்மானுல்லா, அங்கிரிஷ் ரகுவன்சி, டி காக், ஆன்ரிச் நார்வே, வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்களும், குஜராத் அணியில், ராவத் சுதர், நிஷாந்த், குஷாக்ரா, லோம்ரோர், பிரசித் கிருஷ்ணா, ககிஷோ ரபாடா, முகமது சிராஜ் மற்றும் ஜாஷ் பட்லர் ஆகிய வீரர்களும் எடுக்கப்பட்டனர். மேலும் டெல்லி அணியில் கருண் நாயர், ரிஷ்வி, மோகித் சர்மா, அசுதோஷ் ஷர்மா, புரூக், ஜேஎஃப்எம், மிட்செல் ஸ்டார்க், நடராஜன் மற்றும் கே .எல் ராகுல் ஆகிய வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments