• Breaking News

    அந்தியூர்: ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


    ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி ,  கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றியம் பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சி ஆண்டிபாளையம் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்  13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய  செயலாளர்  ரவீந்திரன் , பி.மேட்டுபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர்  தனலட்சுமி குமாரசாமி , பி.மேட்டுபாளையம் பேரூர் கழக செயலாளர்  குமாரசாமி , பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராமசாமி  மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி

    No comments