11-ஆம் வகுப்பு மாணவியிடம் போதையில் பாலியல் சீண்டல்..... தற்காலிக தமிழ் ஆசிரியர் பணி நீக்கம்......

 

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அப்போது தமிழாசிரியர் பிரகதீஸ்வரன் மது போதையில் சிறப்பு வகுப்புக்கு வந்துள்ளார்.

அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகதீஸ்வரனை கைது செய்தனர். நேற்று தற்காலிக ஆசிரியர் பிரகதீஸ்வரன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான அறிக்கை மாவட்ட கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments