கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை..... 10 பேர் அதிரடி கைது

 


கோயம்புத்தூர் பகுதியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அடிக்கடி வாகன சோதனையிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று சுண்ணாம்பு களவாய் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் போதை பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தது. வெளி மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து அவர் தமிழ்நாட்டில் விற்பனை செய்வது தெரிய வந்து நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 10 பேர் பிடிபட்டுள்ளனர்.

அந்த வாலிபர் கொடுத்த தகவலின் பெயரில் சர்ஜூன், அனீஸ் ரகுமான், முஜிபூர் ரகுமான், சனூப், மன்சூர் ரகுமான், முகமது சபீர், ரிஸ்வான் சுகைல், முஜிப் ரகுமான், முகமது நவுபல், பிரகாஷ் ஆகிய 10 பேர் பிடிபட்டனர். மேலும் இவர்களை காவல்துறையினர் கைது செய்த அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி 500 போதை மாத்திரைகள், 7 போதை ஊசிகள் மற்றும் செல்போன்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்த நிலையில் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து பின்னர் அதனை ஊசியில் ஏற்றி மாணவர்கள் உடம்பில் செலுத்தி போதையை வரவழைத்தது தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments