• Breaking News

    தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

     


    தமிழகத்தில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக, 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையில், 15; திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 10; நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments