• Breaking News

    செங்கல்பட்டு: 10 நிமிடத்தில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை தயார் செய்து உலக சாதனை படைத்த தனியார் கல்லூரி மாணவர்கள்


    ரக ரகமாக காட்சிப்படுத்திய ஆம்லெட்டுகளை கண்டு களித்து சுவைத்து பார்த்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்.செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே பிரபல சென்னைஸ் அமிர்தா கல்லூரி  மாணவர்கள் உணவு தாயரிப்பில் புதிய சாதனை படைக்க விரும்புபினர். அதன்படி பத்து நிமிடங்களில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து உலக சாதனையை படைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வினை சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் 

    அருண்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் பின்பு மாணவர்கள் தயாரித்து காட்சிப்படுத்திய ஆயிரம் ஆம்லெட்டுகளை பார்வையிட்டார் பின்பு அதை சுவைத்து பார்த்துவிட்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

    உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கல்லூரியின் நிர்வாக தலைவர் பூமிநாதன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 500 மாணவர்கள் பங்கேற்று ஆயிரம் ஆம்லெட்டுகளை தயாரித்து உலக சாதனை படைத்தனர்.இந்த சாதனையை ஐன்ஸ்டின் உலக சாதனை நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்தது. அதனை தொடருந்து ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனர் கார்த்திக் குமார், கல்லூரி நிர்வாக தலைவர் பூமிநாதனிடம் உலகசாதனை சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    பின்பு மாணவர்கள் தங்களது உற்சாகத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் கத்தி கூச்சலிட்டு அரங்கத்தை அதிரவைத்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

    No comments