அந்தியூர் மங்கலம் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து காவல் சார்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்


ஈரோடு மாவட்டம் , அந்தியூர் மங்கலம் பள்ளியில் அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி மற்றும் விஜி சார்லஸ் ஆகியோர் மங்கலம் பள்ளின் முதல்வர் முன்னிலையில் பள்ளியின் மாணவ ,  மாணவிகள் 18 வயது பூர்த்தியடையாமல்  இரு சக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது , பந்தய வாகனங்கள் ஓட்டக்கூடாது, பெற்றோர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், பள்ளி மாணவ மாணவிகள் போதை பழக்கங்களை பழகக் கூடாது மற்றும் அதிக அளவில் தொலைபேசிகளை உபயோகப்படுத்தக் கூடாது இதுபோன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மங்கலம் பள்ளியின் மாணவ மாணவிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments