வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கனமழை பெய்தது. மேலும், ஜவ்வாது மலை அடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணையில் இருந்து உபரிநீர் அணைக்கு வரும் நீர், திறந்து விடப்படுவதாலும் ஜவ்வாது மலை சிறு ஓடைகளில் இருந்து ஆற்றுக்கு வரும் தண்ணீர் தற்போது செய்யாற்றில் கலந்து வெள்ளப் பெருக்காக மாறிவரும் காட்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.இந்த வெள்ள பெருக்கானது செங்கம் செய்யாற்றின் குறுக்கே கலங்கள் பகுதியில்கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் நாச்சிப்புட்டு அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிறைந்து வழியும் காட்சிகள் பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளதால் ஏராளமானோர் அதனை கண்டு தங்களது செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.
மேலும் செய்யாற்றில் வரும் வெள்ளப்பெருக்கால் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகள் நிறைந்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் காட்டாற்றில் திடீரென அதிக அளவு வெல்ல பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் பொதுமக்கள் யாரும் ஆழமான பகுதிக்கோ ஆற்றில் இறங்கவோ வேண்டாம் எனவும் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
0 Comments