குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் நவராத்திரி பெருவிழாவின் பத்தாம் நாள் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் அம்பு போடும் விழா நிகழ்வானது நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் திகழ்கிறது இந்த கோவிலில் நவராத்திரி பெருவிழாவின் பத்தாம் நாளான உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்பு போடும் விழா நடைபெற்றது முன்னதாக வன்னிய மரத்திற்கு பால்,திரவிய பொடி,மஞ்சள் பொடி,தேன்,பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்பு விடும் நிகழ்வானது நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா காட்சி நடைபெற்றது வீடுகள் தோறும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.
No comments