• Breaking News

    அறந்தாங்கியில் இரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சைக்கிளிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய், மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பேரணியை துவக்கி வைத்தார். கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இரத்ததான விழிப்புணர்வு பேரணி அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று இரத்ததான முகாம் நடைபெற்றது.

     அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கிக்கு 55 யூனிட் இரத்தம் தன்னார்வளர்களால் வழங்கப்பட்டது. முன்னதாக இரத்ததான திட்ட இயக்குனர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் செயலாளர் ஆண்டோ பிரவின் அனைவருக்கும் நன்றி கூறினார். 

    பொருளாளர் முனைவர் முபாரக் அலி, முன்னாள் தலைவர்கள் விகாஸ் சரவணன், கபார்கான், ஜீவா சீனிவாசன், முன்னாள் செயலாளர்கள் இப்ராம்ஷா, செல்ல செந்தமிழ்செல்வன், நியூலுக் கணேசன், முன்னாள் பொருளாளர்கள் பாப்பாத்தி முருகேசன், விஜயகுமார், உறுப்பினர்கள் ராஜா, மருத்துவர் முகமதுஅலி ஜின்னா, காங்கிரஸ் நகர தலைவர் கிருபாகரன், ஒன்றிய தலைவர் சரவணன், கூடலூர் முத்து, கவுன்சிலர் அசாருதீன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.



    No comments