• Breaking News

    ஆதார் கார்டை வைத்து வயதை தீர்மானிக்க கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி

     


    டெல்லி உச்சநீதிமன்றம் ஒருவரின் வயதை தீர்மானிப்பதற்கு ஆதாரை ஒரு முறையான ஆவணம் கிடையாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு சாரா என பல்வேறு செயல்பாடுகளுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது. 

    இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பஞ்சாபை சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவர்கள் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் அதில் பள்ளி சான்றிதழில் இருந்த பிறந்த தேதியை வைத்து 19 லட்சத்து 35 ஆயிரத்து இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை எதிர்த்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை வைத்து 9 லட்சத்து 22 ஆயிரமாக இழப்பீடு தொகையை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

     இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் பள்ளி சான்றிதழில் இருக்கும் தேதியை வைத்து தான் ஒருவரின் வயதை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஆதாரில் உள்ளதை வைத்து ஒருவரின் வயதை தீர்மானிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் ஆதார் அட்டை என்பது ஒருவரின் அடையாள ஆவணமே தவிர ஒருவரின் வயதை தீர்மானிக்கும் ஆவணம் கிடையாது என்று கூறி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    No comments