தமிழகத்திற்கு ரெட்,ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா....?
தமிழகத்திற்கு இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையில் நேற்று முதல் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வருகிற 16-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகள் விடுமுறையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். அதன்படி கோயம்புத்தூரில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இன்று செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்பதால் தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது.
No comments