• Breaking News

    விமானப்படை சாகசம்..... மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது

     


    சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 72 விமானங்கள் கலந்து கொள்ளும் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அலை கடலை விட ஏராளமான கூட்டம் மெரினாவில் திரண்டுள்ளனர். 

    இந்த விமான சாகச நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் பலரும் நேரில் கண்டு களிக்கிறார்கள்.இன்று காலை 11 மணிக்கு  விமான சாகச நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகாஷ் கங்காவின் பாரா ஜம்ப் நடந்து கொண்டிருக்கிறது. 

    மேலும் இந்த சாகச நிகழ்ச்சியின் ஒத்திகை நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் கூடிய நிலையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் அலைகடலென மக்கள் திரண்டுள்ளனர். இதனால் மெரினா கடற்கரையை விழாக்கோலம் பூண்டது போன்ற களைகட்டி உள்ளது.

    No comments