பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு
சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இண்டியா காலனி 4வது தெருவில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு அதே போல் பள்ளிக்கரணையில் உள்ள அலுவலகம், பல்லாவரத்தில் உள்ள அலுவலகம் என 3 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் சோதனை விரிவடையும் வாய்ப்பு உள்ளது. சோதனையின் முடிவில் கைப்பற்றபட்ட பொருள்கள், எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக தற்போது 3 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. பூர்விகா கிளைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments