திருப்பூர் அருகே கும்மியாட்டத்தில் மாஸ் காட்டிய தமிழிசை சௌந்தரராஜன்

 


திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று நடனமாடினார்.

அவினாசி அடுத்த பெருமாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் -கலாம் அறக்கட்டளை சார்பில் சாதனை நிகழ்ச்சிக்காக அழகு வள்ளி கும்மி கலைக்குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.7 மணி நேரம் 7 நிமிடம் 7 நொடிகள் மற்றும் 333 கலைஞர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து நடனமாடும் நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

இதனைதொடர்ந்து கும்மியாட்டக் கலைக்குழுவுடன் இணைந்து அவர் சிறிது நேரம் வள்ளி கும்மி நடனமாடி மகிழ்ந்தார்.

Post a Comment

0 Comments