சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது.
திருப்பத்தூர் அருகே 3 கண்மாய்களை உள்ளடக்கி 40 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் ஆசிய, ஐரோப்பிய பறவைகள் வலசை வருவது வழக்கம். அவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து, மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் திரும்பிச் சென்று விடும்.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதங்களில் போதிய அளவு பெய்ததால் சரணாலயம் முழுவதும் பசுமை போா்த்தியதுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து சாம்பல் கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, நாமக்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, சிறிய நீர்க்காகம், முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகள் வலசை வந்துள்ளன. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்து சென்றனர்.
0 Comments